தமிழ் நாட்டு புத்தர் சிலைகள் தீபாவளி நேர வார இறுதியில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் சிலைகள் அருங்காசியகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பலவகையான சிலைகள் மிக அருமையாக காணக்கிடைத்தன. கற்களால் ஆன சிலைகள் மட்டும் இன்றி, உலோக சிலைகளும் கண்களைக் கவரும் வண்ணம் இருந்தன. பல்வேறு சிலைகளுள் தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கபெற்ற இரு புத்தர் சிலைகளும் அங்கு காணக்கிடைத்தது. பட்டீஸ்வரம் புத்தர் இது பட்டீஸ்வரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. விஜயநகரம் காலத்தை சார்ந்தது. காலம் - 14ஆம் - 16ஆம் நூற்றாண்டு. அதுவரை தமிழ்நாட்டில் பௌத்த மதம் இருந்திருக்கிறது. (இதற்கு முன் பட்டீஸ்வரத்தில் உள்ள துர்கா தேவியை தரிசித்துவிட்டே தஞ்சாவூர் வந்தோம் என்பது கூடுதல் சேதி :-) ) வரலாற்றாசிரியர்கள், பொதுவாக பௌத்த மதம் தென்னாட்டில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்ததாக கருத்தை கொண்டுள்ளனர். வடநாட்டில் பௌத்த மதம் முற்றிலும் மறைந்த பிறகும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாட்டில் நிலைத்திருந்தாக கருதுகின்றனர். மிகவும் அழகான நிலையில் புத்தர் வீற்றிருக்கிறார் கரங்கள் தியான முத்திரையை காட்டுகின்றன. தலையில் புத்தர்...