Skip to main content

Posts

பகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞாபக குறியீடுகள் பகவன் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது. நினைவு சின்னங்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கர் கீழ்கண்ட பௌத்த நினைவு குறியீடுகளை 22 சூலை 1947ல் அரசமைப்புச் சட்டப்பேரவை மூலம் நம் நாட்டு நினைவு சின்னங்களாக கொண்டுவந்தார். தேசியக் கொடியின் மத்தியில் தம்மச்சக்கரம்  நம் நாட்டு தேசியக்கொடியின் மையத்தில் தம்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தம்ம சக்கரத்தில் உள்ள 24 கம்பிகளும் வாழ்க்கை சுழற்சியை தோற்ற வரிசையில் 12 சார்புகளையும் மறைவு வரிசையில் 12 சார்புகளையும் குறிப்பிடுகிறது. 12 சார்புகள் 01. பேதமை, 02. செய்கை, 03. உணர்வு, 04. அருவுரு, 05. வாயில், 06. ஊரு 07. நுகர்வு, 08. வேட்கை 09.பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன் தேசிய மலர்  தாமரை தூய்மையின் அடையாளம். அதனால் தான் பகவன் புத்தர் மலர்ந்த தாமரை மீது அமர்ந்திருக்கிறார். தூய்மை பாதையின் அம்சங்கள் சம்சாரம்- தாமரை சேற்றில் இருந்து வளர்கிறது  தூய்மை- சேற்று தண்ணீரில் வளர்ந்தாலும் மேற்பரப்பில் தூய்
Recent posts
தமிழ் பௌத்த இலக்கியங்கள் தமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI  (Ambedkar Buddhist Intellectuals) – Airport Authority of India -SC/ST Employees Welfare Association, Meenambakkam dt 21/02/2015 இந்தியாவில் புத்தர்   வாழ்ந்த   காலத்தில்   எத்தனை   மொழிகள்   இருந்ததென சிந்தித்தால், இன்று இருக்கும் அளவுக்கு மக்கள்தொகையும் புத்தர் வாழ்ந்த காலத்தில் அன்று இல்லை. எந்தெந்த   இடங்களில்   நதிக்கரைகள் இருந்ததோ   அந்தந்த   இடங்களில்   தான்   மக்கள்   இருந்தனர் .  வட   இந்தியாவில்   கங்கை   நதிக்கரையில் மிகப்பெரிய பேரரசுகள் என சொல்லப்படுகின்ற மகதப்பேரரசும்,கோசலப்பேரரசும்   உருவாகியது .  இங்குதான்   இநதியாவின் முதல்   பேரரசு உருவாகியது . தென்னிந்தியாவில்   காவிரி ,  வைகை ,  தாமிரபரணி   ஆகிய   இந்த   மூன்று   நதிப்படுகையில்   தான் நிலைகுடிகள்  (Settled People)  உருவாகினர் .   நிலைகுடிகள்   உருவாகின்ற   இடங்களில்   தான்   ஒரு   அரசு   (State)  உருவாக   முடியும். அப்படி தென்னிந்தியாவில்   உருவான   பாண்டிய   பேரரசு   தான்   முதல்   பேர