பிராமணன் என்பவன் யார்?.
வேத புத்தகத்தை படிப்பவன் பிராமணனா ?.குரு முலம் தீக்சை பெற்றவன் பிராமனணா?. புராண இதிகாசங்களை படிக்க கேட்டவன் பிராமனணா?.தெய்வ பக்தியில் பைத்தியக்காரன்ப் போன்றவன் பிராமனணா?.பூசை, ஆரதனை, அர்ச்சனை செய்து பழகியவன் பிராமனணா?.துறந்து அக்கினியை அடைகாப்பவன் பிராமனணா?.உலக மருவ போய் உபதேசம் செய்து ஜீவிப்பவன் பிராமனணா?.சிறிய போர்வைத் துணி தெரிய உடம்பில் அணியாதவன் பிராமனணா?. பிரம்மா முகத்தில் பிறந்தேன் என்பவன் பிராமனணா?.சுவாமியை எங்கள் பரம்பரையர் வர பெற்றவர்கள் என்பவன் பிராமனணா?.ஓரிடத்தில் முதலில் பிறந்தவன் என்றும் மற்றோர் இடத்தில இரண்டாம் பிறந்தோர் என்றும் பிதற்றுவன் பிராமனணா?.கோழி வயிற்றில் இருந்து முட்டையும், அதே முட்டையில் இருந்து கோழி பிறந்தது போன்று பிறந்தவன் என்று சொல்லுபவன் பிராமனணா?.கருப்பு இந்தியர்க்களுக்கு வேதம் கற்பிப்பவன் என்று உளறுபவன் பிராமனணா?.சாதிகளுக்கு அதியனவன் என்பவன் பிராமனணா?.இந்தியர்களை அடிமை படுத்தியவன் என்பவன் பிராமனணா?.வேத புளுகுகளை படிக்கக் கெட்ட சூத்திரன் காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்ற அரசருக்கு கற்பித்தவன் பிராமனணா?.சத்திரியர்கள், வைசியர்களை வசியபடுத்தி ஆழ நினைப்பவன் பிராமனணா?.நீதி மன்றத்தில் வேலை பார்ப்பவன் பிராமனணா?.தானே கடவுள் அல்லது தன்னை போலவே கடவுள் வருவர் என்பவன் பிராமனணா?. செத்தவர்கள் பேரில் அரிசி, பருப்பு வங்கி ஜீவிப்பவன் பிராமனணா?.மூட, மத சடங்குகளில் மூழ்கியவன் பிராமனணா?. இல்லை இல்லை இல்லை ........சர்வ பட்ட்ருக்கள் அற்று சமதர்மத்தில் நின்று உண்மையை போதிப்பவன் எவனே அவனே உண்மையான பிராமணான். அவனே சத்தியவான் , அவனே அறிவுடையவன் .......
பண்டிதர் அயோத்திதாசர்
Comments
Post a Comment