Skip to main content



புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள். நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. ஏனென்றால் பிறப்பில்லாமல் இறப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு?
___________________________________________________
புத்தர் அவருடைய சீடன் ஆனந்தாவிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ் காலத்தின் உண்மையான நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால் கேள்விகளே இல்லாத அமைதி உங்களுக்குத் தெளிவாக விளங்கும்
________________________________________________________
நீங்கள் நோய்க்குப் பயந்தாலும், மரணத்திற்குப் பயந்தாலும் அந்த பயம் எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். எங்கிருந்து வந்தது அந்தப் பயம்? பிறப்பிலிருந்து வந்தது தான். அதனால் யாராவது இறந்தால் வருத்தப்படாதீர்கள் - அது இயற்கை. இந்த வாழ்க்கையில் இறந்தவரின் துயரம் முடிந்து விட்டது. நீங்கள் வருத்தப்பட வேண்டுமானால் யாராவது பிறக்கும் போது வருத்தப்படுங்கள்: "அட! மறுபடியும் வந்து விட்டான். மறுபடியும் துக்கம் அனுபவித்து மரணமடையப் போகிறான்!"
______________________________________________________
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை தங்கள் மூச்சு உடலின் உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அறியாமலே இருப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தங்களை மறந்து வெகு தூரத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்.

_______________________________________________________
நீங்கள் தவறான செயலைச் செய்யும் போது, ஓடி மறைவதற்கு எங்குமே போக முடியாது. மற்றவர் அந்தச் செயலைக் காணவில்லையென்றாலும் நீங்கள் அதைப் பார்த்துத்தான் ஆக வேண்டும். ஆழமான குழிக்குச் சென்றாலும் உங்களை அங்கேயும் காணுவீர்கள். தவறான செயலைச் செய்து அதன் விளைவுகளிருந்து தப்பிக்க வழியே இல்லை. அதே போல உங்கள் தூய்மையையும் நீங்கள் ஏன் பார்க்கக் கூடாது? எல்லாமே தெரிகிறது - அமைதியும், கிளர்ச்சியும், விடுதலையும், அடிமைத்தனமும்; இவை எல்லாம் நீங்களே பார்க்க முடிகிறது.
_________________________________________________________
சுறுசுறுப்பாகா இருக்கும் போது மட்டுமல்லாமல் சோம்பலாக இருந்தாலும் தியானம் செய்ய வேண்டும். இதுவே புத்தர் கற்பித்த முறை. நம் போக்கில் விட்டு விட்டால் நல்ல மன உணர்ச்சிகளின் போதுதான் தியானம் செய்வோம். அப்படி இருந்தால் எப்படி முன்னேறுவது? இந்த நிலையில் தொடர்ந்து தூய்மையைக் கெடுக்கும் செயல்களை எப்படி அறுத்தெறிவது? 

Comments

Popular posts from this blog

தமிழ் பௌத்தம்

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது. பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக  வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது. புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம். பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும்.  சௌத்திராந்திகம், வைபாடிகம்,...
சோழ நாட்டில் சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர் சிற்பத்திற்கும், சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதியில் ஆலங்குடிப்பட்டி சென்று புத...
பகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞாபக குறியீடுகள் பகவன் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது. நினைவு சின்னங்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கர் கீழ்கண்ட பௌத்த நினைவு குறியீடுகளை 22 சூலை 1947ல் அரசமைப்புச் சட்டப்பேரவை மூலம் நம் நாட்டு நினைவு சின்னங்களாக கொண்டுவந்தார். தேசியக் கொடியின் மத்தியில் தம்மச்சக்கரம்  நம் நாட்டு தேசியக்கொடியின் மையத்தில் தம்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தம்ம சக்கரத்தில் உள்ள 24 கம்பிகளும் வாழ்க்கை சுழற்சியை தோற்ற வரிசையில் 12 சார்புகளையும் மறைவு வரிசையில் 12 சார்புகளையும் குறிப்பிடுகிறது. 12 சார்புகள் 01. பேதமை, 02. செய்கை, 03. உணர்வு, 04. அருவுரு, 05. வாயில், 06. ஊரு 07. நுகர்வு, 08. வேட்கை 09.பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன் தேசிய மலர்  தாமரை தூய்மையின் அடையாளம். அதனால் தான் பகவன் புத்தர் மலர்ந்த தாமரை மீது அமர்ந்திருக்கிறார். தூய்மை பாதையின் அம்சங்கள் சம்சாரம்- தாமரை சேற்றில் இருந்து வளர்கிறது  தூய்மை- சேற்று தண்ணீரில் வளர்ந்தாலும் மேற...