Skip to main content
பௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு

கி.முஐந்தாம் நூறாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம்தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் எப்போது வந்ததுஇந்தமதத்தை முதல் முதல் இங்குக்கொண்டு வந்தவர் யார்இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம்.
   கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான்அதாவது கி.பிமூன்றாம் நூறாண்டுக்குப் பிறகுதான்பௌத்த மதம்  தமிழ்நாட்டில் வந்திருக்கக்கூடும் என்று சிலர்கருதுகின்றனர்அவ்வாறு அவர்கள் கருதுவதற்குக் காரணம் யாதெனில்கடைச்சங்க நூல்களில் பௌத்த மதத்தைப் பற்றிக் கூறப்படாததுதான்ஆனால்,  இவர்கள்கருத்துத் தவறெனத் தெரிகின்றது.  பௌத்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் கடைச்சங்கத் தொகை நூல்களுட் காணப் படவில்லையாயினும்அச்சங்க காலத்து நூல்களில்காணப் படுகின்றனஅதாவதுகடைச்சங்க காலத்து நூல்களாகிய மணிமேகலை சிலப்பதிகரம் மதுரைக்காஞ்சி என்னும் நூல்களில் இந்த மதத்தைப்பற்றிக்கூறப்பட்டுள்ளனஅன்றியும்பௌத்த மதப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் கடைச்சங்கத் தொகை நூல்களுட் காணப்படுகின்றனமணிமேகலை என்னும் பௌத்தகாவியத்தை இயற்றிய பௌத்தராகிய கூலவாணிகர் சாத்தனார் அருளிச் செய்த செய்யுள்கள் அகநானூறுபுறநானூறுநற்றிணைகுறுந்தொகை என்னும் நூல்களுள்தொகுக்கப்பட்டுள்ளனஇளம்போதியார் என்பவரும் கடைச்சங்க காலத்திலிருந்த பௌத்தப் புலவர்இவரது பெயரே இவர் பௌத்தர் என்பதைத் தெரிவிக்கின்றது. (போதி =அரச மரம்அரசமரத்தின் கீழே புத்தர் ஞானம் பெற்றபடியால் பௌத்தர் அரசமரத்தைத் தொழுவது வழக்கம்.) இந்த இளம்போதியார் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணைஎன்னும் கடைச்சங்கத் தொகை நூலில் 72ஆம் பாட்டகத் தொகுக்கப்பட்டிருக்கின்றதுஆகவேகடைச்சங்க நூல்களில் பௌத்தப் புலவர்களின் செய்யுள்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றபடியினால்அச்சங்க காலத்துக்குப் பிறகுதான் பௌத்த மதம் தமிழ்நாடு வந்திருக்கக் கூடும் என்பது தவறாகின்றது.கடைச்சங்க காலத்திலேயே,அதாவது கி.பி முதல்லாவதுஅல்லது இரண்டாவது நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றது ஆயினும்பௌத்த மதம்தமிழ்நாட்டிற்கு முதல் முதல் எப்போது வந்தது என்னும் கேள்விக்கு இது விடையன்று.
   இக் கேள்விக்கு விடை தமிழ்நூல்களில் காணக் கிடைக்கவில்லைஆகையால்புறச்சான்றுகளைக் கொண்டு ஆராய்வோம்நற்காலமாகஅசோக சக்கரவர்த்திஎழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கின்றனஅசோக சக்கரவர்த்தி மௌரிய மன்னர்களுள் தலைசிறந்தவர்.கி.முமூன்றாம் நூற்றாண்டில் கி.மு 273 முதல் 232 வரையில்தமிழ் இந்தியாவைத் தவிர ஏனைய இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ்வைத் துலகாண்ட ஒப்பற்றமன்னர்அன்றியும் இவர்பௌத்த மதத்தை மேற்கொண்டுஇந்தியா தேசத்திலும் அதற்காப்பாற்பட்ட தேசங்களிலும் இந்தப் பௌத்த மதத்தைப் பரவச்செய்தார்இவர்பாரத நாட்டில் வெவ்வேறிடங்களில் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராச்சிக்கு உதவி செய்கின்றன என்று சொன்னோம்சௌராஷ்டிராதேசத்திலுள்ள கிர்னார் நகரத்துக்கருகில் உள்ள பாறையொன்றில் எழுதப்பட்ட அசோக சாசனத்தில் (Edict ii) கீழ்க் கண்ட பகுதி காணப்படுகின்றது:-
 "காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர் பெருமா னுடைய (அசோகருடையஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும்இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ,பாண்டியசத்தியபுத்திரகேரளபுத்திர தேசங்களிலும்தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும்அதற்கப்பாற்பட்டதேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப் பட்டனஅவைமக்களுக்கு மருத்துவம்,கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலையங்களாம்."
   இந்தச் சாசனத்தில்அசோக சக்கரவர்த்தி தமது நாட்டிலும்தமிழ்நாட்டிலும்ஏனைய நாடுகளிலும் மருத்துவ நிலையங்களை அமைத்தார் என்பது மட்டும்கூறப்படுகின்றதுஆனால்கீழ்கண்ட இன்னொரு சாசனத்தில்இவர் தமிழ்நாட்டில் பௌத்த மதத்தைப் பரப்பிய செய்தி காணப்படுகின்றதுபிஷாவர் நகரத்துக்கருகில்காணப்படுகின்ற இந்தச் சாசனம் (Rock Edict iii), போர்செய்து பலரைக் கொன்று அதனால் பெறும் மறவெற்றியைவிடஅறத்தைப் போதித்து அதனால் பெறும்அறவெற்றியே தமக்கு விருப்பமானது என்பதைத் தம் பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்கும் அசோக மன்னர் தெரிவிக்கிற செய்தியைக் கூறுகின்றதுஇவ்வாறு கூறுகின்றஇந்தச் சாசனத்தில் நமது ஆராய்ச்சிக்கு உதவி செய்கின்ற பகுதியும் காணப்படுகின்றதுஅது வருமாறு:-
 "தரும விஜயம் (அறவெற்றிஎன்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றதுஇந்த வெற்றி இந்தஇராச்சியத்திலும்இதற்கப்பாற்பட்ட அறுநூறு யேசனை தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும் அதற்கும் அப்பால் டாலமி,அண்டிகொனஸ்மகஸ்அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும்இப்பால் தெற்கேயுள்ள சோழபாண்டிய,  தாம்பிரபரணி (இலங்கை)வரையிலும் இந்த (அறவெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது."
   இந்த சாசனம் கி.மு. 258 இல் எழுதப்பட்டதுஅசோகமன்னர்தமிழ் நாட்டிலும்இலங்கையிலும் தரும விஜயத்தை - அதாவதுபௌத்த தருமத்தைப் போதித்து அதனைப்பரவச்  செய்வதால் வந்த அறவெற்றியை - கைப்பற்றினார் என்னும் செய்தியை இச் சாசனம் தெரிவிக்கின்றதுஇதன் திரண்ட பொருள் என்னவென்றால்அசோகசக்கரவர்த்தி தூதர்களை (பிக்ஷுக்களைஅனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் பரவச் செய்தார் என்பதேசரித்திரஆராய்ச்சியாளர் அனைவரும் இக்கருத்தையே இச் சாசனப்பகுதி விளக்குவதாகக் கூறுகின்றனர்.
   அசோக மன்னர் காலத்தில்தான் பௌத்தமதம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதற்கு  வேறுவிதமான புறச்சான்றும் கிடைக்கின்றது. 'மகாவம்சம்', 'தீபவம்சம்என்னும்பௌத்த நூல்கள் இலங்கையில் பௌத்த மதம் வந்த வரலாற்றினையும்அந்த மதத்தை இலங்கை அரசர் எவ்வாறு போற்றிப் பாதுகாத்து வந்தனர் என்னும்வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றனஇலங்கைத்தீவு தமிழ்நாட்டையடுத்துள்ளதாகையாலும்தமிழ்நாட்டினைக் கடந்தே இலங்கைக்குச் செல்ல வேண்டுமாகையாலும்இலங்கையில் பௌத்தமதம் வந்த அதே காலத்தில்தான் தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் வந்திருக்கவேண்டும் என்று துணியலாம்ஆகவேதீபவம்சமும்மகாவம்சமும் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்பாடலீபுரம் என்னும் நகரத்தில் அசோக சக்கரவத்தியின் ஆதரவில் மொக்கலபுத்த திஸ்ஸ என்னும்தேரரின் தலைமையில் மூன்றாவது பௌத்த மகாநாடு கூடியதென்றும்ஒன்பது திங்கள் வரையில் அந்த மகாநாட்டில் பௌத்தமத ஆராய்ச்சி நடைபெற்றதென்றும்,மகாநாடு முடிந்த பின்னர் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பல பிக்குகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும்இந்த நூல்கள் கூறுகின்றன.
   காஸ்மீரம்காந்தாரம் என்னும் நாடுகளுக்கு மஜ்ஜந்திகர் என்னும் தேரரும்மகிஷ மண்டலத்துக்கு மகாதேவர்  என்னும் தேரரும் அனுப்பப் பட்டனர்வனவாசி நாட்டிற்குரக்கிதர்  என்னும் தேரரும்அபரந்தக தேசத்திற்குத் தம்மரக்கிதர்  என்னும் தேரரும்மகாராட்டிர தேசத்திற்கு மகாதம்மரக்கிதர்  என்னும் தேரரும்யோன தேசத்திற்குமகாரக்கிதர்  என்னும் தேரரும் அனுப்பப் பட்டனர்.இமாலயத்தைச் சேர்ந்த நாட்டிற்கு மஜ்ஜிம  என்னும் தேரரும்சுவன்னபூமி நாட்டிற்குச் சோணர்உத்திரர்  என்னும்தேரர்களும் அனுப்பப் பட்டனர்பெரிய தேரராகிய மகிந்தரும் அவரின் சீடர்களாகிய இட்டியர்உத்தியர்சம்பலர்பத்தசாலர் என்பவர்களும் இலங்கைத் தீவுக்குப்பௌத்தமதத்தைப் பரவச் செய்ய அனுப்பப் பட்டனர்மகிந்தர் முதலியவர்கள்தாம் அடைந்திருந்த இருத்தியினாலேஆகாயவழியாகப் பறந்து இலங்கையை யடைந்தனர்என்று மகாவம்சம் என்னும் நூல் (12 ஆம் அதிகாரம்கூறுகிறது.
  (இதில் கூறப்படுகிற காந்தாரதேசம் என்பது பஞ்சாப் தேசத்து வடபுறத்தில் உள்ள பெஷாவர்ராவல்பிண்டி என்னும் நாடுகளாகும்காஸ்மீரம் என்பது இப்போதுள்ளகாஸ்மீரதேசம்மகிஷ்மண்டலம் என்பது இப்போதைய மைசூர் நாடு என்று கருதுவர் சிலர்ஆனால் விந்தியமலைக்கு தெற்கில் இருந்ததும் மகிஷ்மதி என்னும்தலைநகரைக் கொண்டிருந்ததுமான மகிஷ்மண்டலம் என்னும் தேசமாகும் என்று ஆராய்சியாளர் கூறுவர்வனவாசி என்பது இப்போதைய வடகன்னட ஜில்லாவைக்சேர்ந்த பகுதிஇங்கு இப்போதும் பனவாசி என்னும் பட்டினம் இருக்கிறதுஅபராந்தக (மேற்குக் கோடிதேசம் என்பது குஜராத்துகத்தியவார்கச்சுசிந்து என்னும்நாடுகளைச் சேர்ந்த பாகம்மகாராட்டிரம் என்பது இப்போது மராட்டி பாஷை பேசுகிற மகாராட்டிர தேசம் ஆகும்யோன தேசம் என்பது யவன நாடுஇது இந்தியதேசத்துக்கப்பால் வடமேற்குப் பக்கத்தில் உள்ள தேசம்இமாலயம் என்பது இமயமலைச்சாரலைச் சேர்ந்த நாடுகள்சுவர்ணபூமி என்பது பர்மா தேசம் என்று கருதுவர்சிலர்ஆனால்கர்ணசுவர்ண எனப்படும் வங்காளதேசம் என்றும்மத்திய இந்தியாவில் உள்ளதும் கங்கையாற்று ஒரு கிளையாக உள்ளதும் ஆன சோணை நதி (இரண்யவாஹயைச் சூழ்ந்த நாடு என்றும் ஆராய்ச்சி வல்லார் கருதுவர்இலங்கை அல்லது தம்பபண்ணி (தாம்ரபரணிஎன்பது இப்போதைய சிங்களத் தீவு ஆகும்.)
   இவ்வாறு இந்தியாவிலும் அதற்கு அண்மையிலும் உள்ள நாடுகளுக்குப் பௌத்த பிக்ஷுக்களை அனுப்பிய மூன்றாவது பௌத்த சங்கம்தமிழ் நாட்டிற்குப் பிக்ஷுக்களை அனுப்பியதாக இலங்கை நாட்டு நூலாகிய மகாவம்சம் கூறவில்லைஏன்இதன் காரணம் என்னஆனால்மேலே காட்டியபடிஅசோக சக்கரவர்த்திஎழுதியுள்ள கல்வெட்டுச் சாசனங்கள் இரண்டும் (Edicts ii, and iii)  தமிழ்நாட்டிலே பௌத்த பிஷுக்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றனஅன்றியும் அசோக சக்கரவர்த்தியும்அவரால் அனுப்பப்பட்ட மகேந்திர தேரரும் கட்டிய விகாரைகளும் தூபிகளும் தமிழ்நாட்டிலே இருந்தன என்று வேறு சான்றுகள் தெரிவிக்கின்றனயுவாங் சுவாங் என்னும்சீனநாட்டுப் பௌத்தர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பௌத்தசமய ஆராய்ச்சி செய்தார்அவர் எழுதியுள்ள தமது யாத்திரைக் குறிப்பில்கீழ்கண்ட செய்திகள் கூறப்படுகின்றன. (யுவாங் சுவாங் கி.பி 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்தார்.) காஞ்சிபுரத்திலே அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட நூறு அடி உயரம்உள்ள பௌத்த ஸ்தூபி இருந்ததையும்சோழ நாட்டிலே அசோக சக்கரவர்த்தி  கட்டிய ஒரு பௌத்த விகாரை இருந்ததையும் இவர் குறிப்பிடுகிறார்அன்றியும்பாண்டிநாட்டின் தலைநகருக்கு (மதுரைக்குஅருகிலே அசோக சக்கரவர்த்தியின் தம்பியாகிய மகேந்திரரால் கட்டப்பட்ட ஒரு சங்காராமம் (பௌத்த விகாரைஇருந்ததாகவும்அதற்குக் கிழக்கே அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபி இருந்ததாகவும் இவை இரண்டும் இவர் காலத்தில் இடிந்து சிதைந்து புல் பூண்டு முளைத்துக்காணப்பட்டன என்றும் இவர் குறிப்பிடுகிறார் 1.
 1. Beal Records if the western world ii. p. 231
   பர்மா தேசத்துப் பௌத்தப் பிக்குப் பரம்பரையைக் கூறுகிற வரலாறு (Talaing Records)  காஞ்சிபுரத்துக்கு அருகிலே பதரதிட்டை என்னும் இடத்தில் அசோகசக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தம்மபாலர் என்னும் பௌத்த பிக்கு வசித்திருந்தார் என்று கூறுகிறதுஇந்தத் தர்மபாலர் என்பவர் பேர்போன ஆசாரியதம்மபாலர் ஆவர்இவர் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ப் பௌத்த பிக்ஷுஇவர் பௌத்த வேதமாகிய திரிபிடகத்தின் சில பகுதிகளுக்குப் பாலி மொழியில் உரைஎழுதியிருக்கிறார்இவர் கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர்தாம் எழுதிய நூலில்அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தாம்தங்கியிருந்து இந்நூலை எழுதியதாகக் கூறியிருக்கிறார்.
  சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததாகக் கூறப்படுகிற இந்திரவிகாரை என்பது மகேந்திர தேரரால் கட்டப்பட்ட விகாரை என்று ஆராய்ச்சியாளர்கூறுகிறார்கள்.
  இவ்வாறு அசோக சக்கரவர்த்தியின் சாசனங்களும்ஏனையோர் சான்றுகளும் தமிழ்நாட்டிலே அசோக சக்கரவர்த்தியும் அவர் அனுப்பிய மகேந்திரரும் கட்டியவிகாரைகளும் தூபிகளும் இருந்த செய்தியைக் கூறுகின்றனஆகவேஎனைய நாடுகளுக்குப் பௌத்த பிக்ஷுக்கள் அனுப்பப்பட்டது போலவே தமிழ்நாட்டிற்கும்அனுப்பபட்டிருக்கவேண்டும்அவ்வாறு அனுப்பட்டவர்கள் மகேந்திர தேரரும் அவருடன் வந்த பிக்ஷுக்களாகவும் இருக்க வேண்டும்ஆனால்இச் செய்திகளை இலங்கைநூலாகிய மகாவம்சம் ஏன் கூறாமல் மறைத்துவிட்டதுஇதன் காரணம் யாது?
   பண்டைக் காலத்தில்  தமிழர் இலங்கைமேல் படையெடுத்துச் சென்று அடிக்கடி அந்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தபடியாலும்அடிக்கடி தமிழருக்கும்சிங்களவரான இலங்கையாருக்கும் போர் நிகழ்ந்து வந்தபடியாலும்மகேந்திரர்  தமிழ்நாட்டில் பௌத்த மதத்தைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள்பகைமைகாரணமாகக் கூறமல் விட்டனமகத நாட்டிலிருந்து நேரடியாக பௌத்த மதம் தமது இலங்கைத் தீவுக்கு வந்தது என்னும் பெருமையையடைவதற்காக இலங்கைபிக்குகள் இதனை மறைத்துவிட்டார்கள் என்று வின்ஸென்ட் ஸ்மித் என்பவர் கூறுகிறார். 1  (1.  P45 Asoka 3rd Edition by Vincent A. Smith.)
    இவர் கருத்தையே ஆராய்ச்சி வல்லார் ஒப்புக் கொள்கின்றனர்வட இந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரர்கடல் வழியாகப் பிராயணம் செய்திருக்கவேண்டும் என்றும் அவ்வாறு கடல் பிரயாணம்  செய்தவர் இலங்கைக்குச் செல்லும் வழியில் உள்ளதும் அக்காலத்தில் பேர்பெற்று விளங்கியதுமானகாவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கக்கூடும் என்றும்அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப்பட்டவைதாம் அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ்நூல்களில் கூறப்படும்இந்திர விகாரைகளென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
  பிக்ஷுக்கள் ஆகாய வழியாகப் பறந்து நேரே இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் என்னும் இலங்கை நூல் கூறுகிறதென்றாலும்அசோகர் அனுப்பிய பௌத்த பிக்ஷுக்கள்இலங்கைக்குப் போகும் வழியில் தமிழ்நாட்டிலே தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்திருக்க வேண்டும் என்று கருதுவர் அரசாங்க சிலாசாசன ஆராய்ச்சியாளர். 2.  (2. EP. Rep 1097 Page 61)
 அவ்வாறு கருதுவர் வேறு சிலரும். 3.   (3. Asoka;s Mission to Ceylon and some connected problem by Jothirmay Sen. Indian Historical querterly Vol V.PP 667-678)  மகேந்திரர் நேரேஇலங்கைக்கு ஆகாய வழியாகப் பறந்து சென்றார் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுவது ஐயப்படுவதற்குரியது என்றும்தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தான் மகேந்திரர்இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் மற்றோர் ஆராய்ச்சியாளரும் கருதுகிறார்அவர் கூறுவதன் சாரமாவதுஅசோகருடைய இரண்டு (Rock Edicts ii, and iii)சாசனங்களில் கூறப்படுகிற தம்பபன்னி (தாம்பிரபரணிஎன்பது தம்பபன்னி தீவாக (இலங்கைத் தீவாகஇருக்க வேண்டும் என்பதில்லைஅது தாம்பிரபரணி பாய்கிற,தற்போது திருநெல்வேலி என்று வழங்கப்படுகிற ஜில்லாவாகும்யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் கூறுகிற மலயகூடம் என்னும் தேயமும் இதுவாகும்இங்கிருந்துபடகேறிச் சிறிது தூரத்தைக் கடந்தால் தம்பன்னிக்கு (இலங்கைக்குச்செல்லலாம். 1   1. Pages 60,62 on the Chronicles of Ceylon by Bimala Chrun Law
    பாண்டியநாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றனஇக் குகைகளில் பிக்குகள் படுத் துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கி யமைக்கப்பட்டபடுக்கைகளும் அப்படுக்கையின் கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகின்றனஇக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவைஇலங்கைத் தீவில் பௌத்தத் துறவிகள்தங்குவதற்காகப் பண்டைக்காலத்தில் அமைக்கப்பட்ட குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றனபௌத்தத் துறவிகள் ஊருக்குள்வசிக்கக்கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால்அவர்கள் வசிப்பதற்காக மலைப் பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக்காலத்து வழக்கம்இலங்கையிலும்பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் அமைப்பைக் கொண்டு இவை பௌத்தத் துறவிகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டவை என்றும்இப் பாண்டி நாட்டுக்குகைகளில் காணப்படும் எழுத்துக்களைக் கொண்டு (இவை அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதால்), இவை கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்லவர் கூறுகின்றனர்இவ்வாறு காணப்படும் பாண்டிநாட்டுக் குகைகளில் ஒன்றுஅரிட்டாபட்டி என்னும் கிராமத்துக்கருகில் இருக்கின்றது. 'அரிட்டாபட்டிஎன்னும் பெயர்பௌத்த மதத்தைப் பரவச் செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர்என்னும் பிக்குவை நினைவூட்டுகின்றதுஇந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும்ஆனது பற்றியேஇக்குகைக்கருகில் உள்ள சிற்றூர் 'அரிட்டாபட்டிஎன்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர்மகாவம்சம் என்னும் நூல் மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து பௌத்தமதத்தைப் பரப்பினார் என்று சொல்வதைப் பாண்டிநாட்டில் உள்ள 'அரிட்டாபட்டிஎன்னும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன.
   மேலே எடுத்துக்காட்டிய சான்றுகளினாலேயாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கப் பெற்றோம்அதாவது தமிழ்நாட்டில் பௌத்தமதம் எந்தக் காலத்தில்வந்ததுஇந்த மதத்தைக் கொண்டுவந்து இங்குப் புகுத்தியவர் யாவர்என்னும் வினாக்களுக்குகி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்த மதம் தமிழ்நாட்டில் வந்ததென்றும்,இதனை இங்குக் கொண்டு வந்து புகுத்தியவர் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகேந்திரரும் 1 மற்றும் அவரைச் சேர்ந்த பிக்குகளுமாவார் என்றும் விடைகண்டோம்.
 1. இந்த மகிந்தர் (மகேந்திரர்அசோக சக்கரவர்த்தியின் மகனார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றனஇந்தியாவில் உள்ள நூல்கள் இவரை அசோக மன்னருடையதம்பியார் என்று கூறுகின்றனமகனார் ஆயினும் ஆகுகதம்பியார் ஆயினும் ஆகுக இவர் அசோக மன்னருடைய உறவினர் என்பது மட்டும் உறுதி.

Comments

Popular posts from this blog

தமிழ் பௌத்தம்

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது. பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக  வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது. புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம். பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும்.  சௌத்திராந்திகம், வைபாடிகம்,...
சோழ நாட்டில் சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர் சிற்பத்திற்கும், சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதியில் ஆலங்குடிப்பட்டி சென்று புத...
தமிழ் பௌத்த இலக்கியங்கள் தமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI  (Ambedkar Buddhist Intellectuals) – Airport Authority of India -SC/ST Employees Welfare Association, Meenambakkam dt 21/02/2015 இந்தியாவில் புத்தர்   வாழ்ந்த   காலத்தில்   எத்தனை   மொழிகள்   இருந்ததென சிந்தித்தால், இன்று இருக்கும் அளவுக்கு மக்கள்தொகையும் புத்தர் வாழ்ந்த காலத்தில் அன்று இல்லை. எந்தெந்த   இடங்களில்   நதிக்கரைகள் இருந்ததோ   அந்தந்த   இடங்களில்   தான்   மக்கள்   இருந்தனர் .  வட   இந்தியாவில்   கங்கை   நதிக்கரையில் மிகப்பெரிய பேரரசுகள் என சொல்லப்படுகின்ற மகதப்பேரரசும்,கோசலப்பேரரசும்   உருவாகியது .  இங்குதான்   இநதியாவின் முதல்   பேரரசு உருவாகியது . தென்னிந்தியாவில்   காவிரி ,  வைகை ,  தாமிரபரணி   ஆகிய   இந்த   மூன்று   நதிப்படுகையில்   தான் நிலைகுடிகள்  (Settled People)  உருவாகினர் .   ...