புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள். நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. ஏனென்றால் பிறப்பில்லாமல் இறப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு?
____________________ புத்தர் அவருடைய சீடன் ஆனந்தாவிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ் காலத்தின் உண்மையான நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால் கேள்விகளே இல்லாத அமைதி உங்களுக்குத் தெளிவாக விளங்கும் ____________________ நீங்கள் நோய்க்குப் பயந்தாலும், மரணத்திற்குப் பயந்தாலும் அந்த பயம் எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். எங்கிருந்து வந்தது அந்தப் பயம்? பிறப்பிலிருந்து வந்தது தான். அதனால் யாராவது இறந்தால் வருத்தப்படாதீர்கள் - அது இயற்கை. இந்த வாழ்க்கையில் இறந்தவரின் துயரம் முடிந்து விட்டது. நீங்கள் வருத்தப்பட வேண்டுமானால் யாராவது பிறக்கும் போது வருத்தப்படுங்கள்: "அட! மறுபடியும் வந்து விட்டான். மறுபடியும் துக்கம் அனுபவித்து மரணமடையப் போகிறான்!" ____________________ பிறந்ததிலிருந்து இறக்கும் வரை தங்கள் மூச்சு உடலின் உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அறியாமலே இருப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தங்களை மறந்து வெகு தூரத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். ____________________ நீங்கள் தவறான செயலைச் செய்யும் போது, ஓடி மறைவதற்கு எங்குமே போக முடியாது. மற்றவர் அந்தச் செயலைக் காணவில்லையென்றாலும் நீங்கள் அதைப் பார்த்துத்தான் ஆக வேண்டும். ஆழமான குழிக்குச் சென்றாலும் உங்களை அங்கேயும் காணுவீர்கள். தவறான செயலைச் செய்து அதன் விளைவுகளிருந்து தப்பிக்க வழியே இல்லை. அதே போல உங்கள் தூய்மையையும் நீங்கள் ஏன் பார்க்கக் கூடாது? எல்லாமே தெரிகிறது - அமைதியும், கிளர்ச்சியும், விடுதலையும், அடிமைத்தனமும்; இவை எல்லாம் நீங்களே பார்க்க முடிகிறது. ____________________ சுறுசுறுப்பாகா இருக்கும் போது மட்டுமல்லாமல் சோம்பலாக இருந்தாலும் தியானம் செய்ய வேண்டும். இதுவே புத்தர் கற்பித்த முறை. நம் போக்கில் விட்டு விட்டால் நல்ல மன உணர்ச்சிகளின் போதுதான் தியானம் செய்வோம். அப்படி இருந்தால் எப்படி முன்னேறுவது? இந்த நிலையில் தொடர்ந்து தூய்மையைக் கெடுக்கும் செயல்களை எப்படி அறுத்தெறிவது? | |
தமிழ் பௌத்த இலக்கியங்கள் தமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Authority of India -SC/ST Employees Welfare Association, Meenambakkam dt 21/02/2015 இந்தியாவில் புத்தர் வாழ்ந்த காலத்தில் எத்தனை மொழிகள் இருந்ததென சிந்தித்தால், இன்று இருக்கும் அளவுக்கு மக்கள்தொகையும் புத்தர் வாழ்ந்த காலத்தில் அன்று இல்லை. எந்தெந்த இடங்களில் நதிக்கரைகள் இருந்ததோ அந்தந்த இடங்களில் தான் மக்கள் இருந்தனர் . வட இந்தியாவில் கங்கை நதிக்கரையில் மிகப்பெரிய பேரரசுகள் என சொல்லப்படுகின்ற மகதப்பேரரசும்,கோசலப்பேரரசும் உருவாகியது . இங்குதான் இநதியாவின் முதல் பேரரசு உருவாகியது . தென்னிந்தியாவில் காவிரி , வைகை , தாமிரபரணி ஆகிய இந்த மூன்று நதிப்படுகையில் தான் நிலைகுடிகள் (Settled People) உருவாகினர் . ...
Comments
Post a Comment