பகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞாபக குறியீடுகள் பகவன் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது. நினைவு சின்னங்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கர் கீழ்கண்ட பௌத்த நினைவு குறியீடுகளை 22 சூலை 1947ல் அரசமைப்புச் சட்டப்பேரவை மூலம் நம் நாட்டு நினைவு சின்னங்களாக கொண்டுவந்தார். தேசியக் கொடியின் மத்தியில் தம்மச்சக்கரம் நம் நாட்டு தேசியக்கொடியின் மையத்தில் தம்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தம்ம சக்கரத்தில் உள்ள 24 கம்பிகளும் வாழ்க்கை சுழற்சியை தோற்ற வரிசையில் 12 சார்புகளையும் மறைவு வரிசையில் 12 சார்புகளையும் குறிப்பிடுகிறது. 12 சார்புகள் 01. பேதமை, 02. செய்கை, 03. உணர்வு, 04. அருவுரு, 05. வாயில், 06. ஊரு 07. நுகர்வு, 08. வேட்கை 09.பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன் தேசிய மலர் தாமரை தூய்மையின் அடையாளம். அதனால் தான் பகவன் புத்தர் மலர்ந்த தாமரை மீது அமர்ந்திருக்கிறார். தூய்மை பாதையின் அம்சங்கள் சம்சாரம்- தாமரை சேற்றில் இருந்து வளர்கிறது தூய்மை- சேற்று தண்ணீரில் வளர்ந்தாலும் மேற...